Monday, June 16 2025

Header Ads

எம்.பில், பி.எச்டி நுழைவுத்தேர்வு ஜூலை 10ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்லைக்கழகம் பதிவாளர் செந்தில்வாசன் வெளியிட்ட அறிக்கை: பாரதியார் பல்கலைக்கழகத்துறைகளிலும் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ள கல்லூரிகளிலும் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் 2015-16ம் கல்விஆண்டிற்கான எம்.பில்,பி. எச்டி ஆராய்ச்சி பட்டப்படிப்பு பொதுநுழைவுத் தேர்விற்கான, பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 


அதன்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர்க்கு 100ரூபாய் அபாராத கட்டணத்துடன் 350 ரூபாயும், பிறவகுப்பினர்க்கு 100 ரூபாய் அபாராத கட்டணத்துடன் 600 ரூபாய் செலுத்த வேண்டும். ஜூலை 10ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ‘ஒருங்கிணைப்பாளர், வேதியியல்துறை, பாரதியார் பல்கலைக்கழகம்’ என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். அஞ்சல் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.