Header Ads

Breaking News
recent

சித்தா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு இன்று (ஜூன் 29) விண்ணப்பம்

சென்னை : சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் இன்று தொடக்குகிறது. தமிழகத்தில் உள்ள அரசு சித்தா, யுனானி, யோகா மற்றும் இயற்கை, ஓமியோபதி, ஆயுர்வேதா அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ  கல்லூரிகளில் 2015-16ம் ஆண்டுக்கான பி.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.என்.ஓய்.எஸ், பி.யு.எம்.எஸ் மற்றும் பி.எச்.எம்.எஸ். பட்டப்படிப்பில் உள்ள  இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம் இன்று தொடங்குகிறது. வருகிற ஜூலை 24ம் தேதி வரை விண்ணப்ப  வினியோகம் நடைபெறும்.

விண்ணப்ப வினியோகம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். விண்ணப்பங்களை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த  மருத்துவ கல்லூரி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரி, அரும்பாக்கம் அரசு யுனானி மருத்துவ கல்லூரி, அரும்பாக்கம்  அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி, மதுரை திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவ கல்லூரி, நாகர்கோவில் அரசு ஆயுர்வேதா  மருத்துவ கல்லூரிகளில் மட்டும் வினியோகம் செய்யப்படுகிறது.

விண்ணப்ப கட்டணம் ரூ..500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம்  மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை- 600106”  என்ற முகவரிக்கு ஜூலை 31ம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வரும்  விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும், விவரங்களை www.tnhealth.org என்ற முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Powered by Blogger.