Header Ads

Breaking News
recent

ராணுவ மருத்துவப்பிரிவில் பல் டாக்டர்

ராணுவ பல் மருத்துவ மனையில் காலியாக உள்ள 23 பல் டாக்டர்கள் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: 

Short Service commissioned (SSC) Officer: 

23 இடங்கள். 

தகுதி: 


இறுதி வருடத்தில் 55% மதிப்பெண்களுடன் BDS/MDS முடித்திருக்க வேண்டும். 31.3.2015 தேதியின்படி DCIயின் கீழ் 1 வருட Internship முடித்திருக்க வேண்டும். 31.12.2015 தேதி வரையில் செல்லுபடியாகத்தக்க வகை யிலான Permanent Dental Registration சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ராணுவத்தில் சேவை புரிவதற்கான தகுந்த மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

31.12.2015 தேதிப்படி 45க்குள். 

சம்பளம்: 

ரூ.17,160-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,100 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பம் பரிசீல னைக்குப் பின் பல் மருத்துவ படிப்பில் இறுதியாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மருத்துவ தகுதித் தேர்வுக்கு உட்படுத்தப்படுவர். மருத்துவத் தகுதித் தேர்வில் தகுதி பெறுபவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: 

ரூ.200/- இதைDirector General Armed Forces Medical Services (AP Fund) என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். 

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

Director General Armed Forces Medical Services,
(DGAFMS/DENTAL-2), Room No: 25, ‘L’ Block,
Ministry of Defence,
NEWDELHI.110 001.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.7.2015.

No comments:

Powered by Blogger.