Header Ads

Breaking News
recent

இன்ஜினியரிங் படிப்பில் இன்று (ஜூன் 29) மாற்றுத் திறனாளிகளுக்கு கவுன்சலிங்


பொறியியல் பிரிவில் மாற்றுத்திறனாளிகள் கலந்தாய்வு  இன்று நடைபெறுகிறது. 

6 ஆயிரம் இடங்களுக்கு 350 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 2015-2016ம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் நேற்று முதல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் மொத்தம் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 2 லட்சத்து 658 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. 
முதற்கட்டமாக, நேற்று சிறப்பு பிரிவினரான விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. நேற்று நடைபெற்ற கலந்தாய்வில், 500 இடங்களுக்கு 1000 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இதில் 385 பேர் ஒதுக்கீடு பெற்றனர். 115 இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு பின்னர் நடத்தப்படும். 
இதனை தொடர்ந்து இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. மொத்தம் 6 ஆயிரம் இடங்களுக்கு 350 பேர் அழைக்கப்பட்டனர். இதில் காலியாக உள்ள இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்படும்.

No comments:

Powered by Blogger.