Header Ads

Breaking News
recent

இந்தியாவில் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரே முதல்வர் ஜெயலலிதா தான்

இந்தியாவில் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்வது தமிழக முதல்வர் ஜெயலலிதா என மாநகராட்சி மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.
பசுமலை சி.எஸ். தொழிற்பயிற்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி,சைக்கிள்,சீருடை மற்றும் நோட்டுப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக் கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஆன்டணி தலைமை வகித்தார். முதல்வர் ராஜபாண்டியன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு  அழைப்பாளராக மாநகராட்சி மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி,சைக்கிள் வழங்கி பேசியதாவது: 

இந்தியாவில்
கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்து மாணவ, மாணவியரு க்கு விலையில்லா நோட்டுப் புத்தகம்,மடிக்கணினி உள்ளிட்ட 14 வகையான நலத்திட்டங்களை தமிழக முதல்வர் கொடுத்துள்ளார்.இது தமிழகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செய்யப்படும் திட்டங்கள்.இதனை உங்கள் வளர்ச்சிக்காக பயன்படுத்துங்கள்.மடிக்கணினி தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 23 லட்சம் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக மதுரை மாவட்டத்தில் மட்டும் 90,234 மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல
2014-15 ம் ஆண்டிற்கு தமிழகமெங்கும் விலையில்லா சைக்கிள் வழங்க 6 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக முதல்வர் ரூ.216 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.இப்படி மாணவ,மாணவியருக்கு தினந்தோறும் நலத்திட்டங்களை தமிழக முதல்வர் கொடுத்து வருகிறார்.கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியுள்ளார்.

இதன்
மூலம் உலகம் உங்கள் கையில் உள்ளது.இதனை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞர் ரமேஷ்,ஜெ பேரவை ஒன்றிய துணைச்செயலாளர் முருகன், திருப்பரங்குன்றம் மாநகராட்சி உதவி பொறியாளர் முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Powered by Blogger.