Header Ads

Breaking News
recent

ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு

 கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை  நடைபெற இருக்கிறது. இந்தக் கலந்தாய்வுக்காக கடந்த மே மாதம் 12-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. சமர்ப்பிக்கப்பட்ட 19,000 விண்ணப்பங்களில் 18,078 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

 தகுதி பெற்றவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதென்றும் அழைப்புக் கடிதம் வரவில்லை என்றாலும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அதற்குரிய அட்டவணையைப் பார்த்து மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்று கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்பிற்கு 280 இடங்களும், உணவுத் தொழில்நுட்பப் படிப்பிற்கு 20 இடங்களும், கோழி உற்பத்தித் தொழில்நுட்பத்திற்கு 20 இடங்களும் உள்ளன. இதில் நெல்லை மற்றும் ஒரத்தநாட்டில் உள்ள 80 இடங்களுக்குக் கலந்தாய்வு நடத்த அனுமதி கிடைக்காவிட்டால் அந்த இடங்களுக்குத் தனியாகக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.