Friday, July 4 2025

Header Ads

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில், முதுகலை மற்றும் எம்.பில் தேர்வு முடிவுகள்

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில், முதுகலை மற்றும் எம்.பில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மே/ஜூன் மாதத்தில் முதுகலை மற்றும் எம்.பில் படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. எம்.பில்., பார்ட் 1 மற்றும் முதுகலை கடைசியாண்டு தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிட்டுள்ளது. இதர படிப்புக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண் பட்டியல்கள், தொகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் தாற்காலிக பட்டச் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் அவர்கள் படித்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் புகைப்பட நகல் வேண்டுவோர் இம்மாதம் 31ம் தேதிக்குள் உரிய கட்டணத்தை பல்கலைக்கழக வங்கிக் கணக்கு எண்.248401000000002-ல் செலுத்தி அதற்கான விண்ணப்பத்தை தாங்கள் பயின்ற கல்லூரியின் முதல்வர் பரிந்துரையுடன், கல்லூரி வழியாக அனுப்ப வேண்டும். வங்கி வரைவோலை ஏற்கப்பட மாட்டாது. தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பருவ, அல்பருவ முறையில் பயின்ற சில பாடங்களில் இதுவரை தேர்ச்சிப் பெறாத மாணவர்களுக்கான தேர்வுகள், உடனடித் தேர்வுகளோடு சேர்த்து நடத்தப்படும். தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

உடனடித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விதிகளுக்குள்பட்டு உரிய கட்டணத்துடன், பயின்ற கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் கல்லூரி வாயிலாக ஆகஸ்ட் 2-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 5 கடைசி நாள். தேர்வு முடிவுகளை காண

http://thiruvalluvaruniversity.ac.in/mayjuneresults2014.php

No comments:

Powered by Blogger.