Tuesday, June 3 2025

Header Ads

ஆர்குட்டுக்கு கூகுள் குட்பை: செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஆர்குட் நிறுத்தம்

பிரபல தேடுதல் வலைதளமான கூகுளின் ஆர்குட் வலைத்தளத்தின் செயல்பாடு வரும் செப்டம்பருடன் நிறுத்தப்படும் என அறி்விக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான ஆர்குட் வலைத்தளம் கூகுள் நிறுவனத்தின் முதல் சமூக வலைதளமாகும். பேஸ்புக் அறிமுகம் செய்யப்பட்ட அதே ஆண்டில் அறிமுகமான ஆர்குட், இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை ஈர்த்தது. எனினும் கடந்த 10 ஆண்டுகளில் கூகுள் பிளஸ் உள்ளிட்ட தளங்கள் பிரபலம் அடைந்ததால் ஆர்குட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்தது. இதனை அடுத்து வரும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஆர்குட்டின் செயல்பாட்டை நிறுத்தப்போவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

No comments:

Powered by Blogger.