Header Ads

Breaking News
recent

347 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி


மதுரை தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், 347 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை மேயர் விவி ராஜன்செல்லப்பா வழங்கினார்.
இவ்விழாவுக்கு பேராயர் ஆரோக்கியசாமி தலைமை வகிóத்தார். மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி மேயர் பேசியது: மதுரை மாவட்டத்தில், 90,234 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. 2014-15-ம் கல்வியாண்டில், 6.30 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வாங்குவதற்கு ரூ.216 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. மதுரையில் 3 ஆண்டுகளில், 70,167 மாணவ, மாணவியருக்கு ரூ.28 கோடி மதிப்பிலான விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கல்வி இடைநிற்றலைத தடுப்பதற்காக 23.21 லட்சம் மாணவ, மாணவியருக்கு ரூ.311 கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் 63,412 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், மாவட்டத்தில் ரூ.1.11 கோடி மதிப்பில் விலையில்லா புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. பெண் கல்வி ஊக்குவிப்பு தொகையாக 8,068 மாணவியருக்கு ரூ.63 லட்சம் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் அந்தோணிசேவியர் பிரிட்டோ, வரிவிதிப்புக்குழுத் தலைவர் எஸ்டி ஜெயபால், சுகாதாரக்குழுத் தலைவர் முனியாண்டி, பிஆர்ஓ சித்திரவேல் உள்ளிட்ட அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் , மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

No comments:

Powered by Blogger.