Header Ads

Breaking News
recent

மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 19-இல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியப் போட்டி



மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியப் போட்டி நாமக்கல்லில் சனிக்கிழமை (ஜூலை 19) நடத்தப்பட உள்ளது.

மாவட்ட தேசிய பசுமை படை சார்பில் நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடத்தப்படும் இப்போட்டியில் மாவட்டத்திலுள்ள அனைவகை பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம்.

போட்டிகள் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் தனித்தனியே நடத்தப்பட உள்ளன. போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஓவியம் வரைவதற்கான தாள் மட்டுமே வழங்கப்படும். ஓவியம் வரைவதற்கு தேவையான பொருட்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும்.

போட்டிக்கான தலைப்பு அன்று காலை 9.30 மணிக்கு தெரிவிக்கப்பட்டு போட்டி 10 மணிக்கு தொடங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் பள்ளியிலிருந்து உரிய அத்தாட்சிக் கடிதத்தை பெற்றுவர வேண்டும். ஒரே பள்ளியில் இருந்து எத்தனை மாணவர்கள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பெயரை மாவட்ட சுற்றுச் சூழல் மற்றும் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளரை என்.மகேஷ்குமாரை நேரடியாக தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9486068416 என்ற அலைபேசியில் எண்ணிலும், ம்ஹட்ங்ள்ட்ய்ள்ற்ங்ழ்000ஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இரு பிரிவுகளிலும் முதல் பரிசாக ரூ.3000ம், இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ.1000, ஆறுதல் பரிசாக இருவருக்கு ரூ.500ம் வழங்கப்பட உள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் வை.குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.