Header Ads

Breaking News
recent

சித்த மருத்துவப் படிப்புகள்: 1174 விண்ணப்பங்கள் விநியோகம்


தமிழகம் முழுவதும் சித்த மருத்துவப் படிப்புகளுக்கு 1174 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் விநியோகிக்கப்படுகின்றன. இந்திய அரசின் அனுமதியும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அனுமதியையும் ஒரு சேர பெற்ற அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
முதல்நாளான திங்கள்கிழமை 455 விண்ணப்பங்களும், இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை 619 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டன. ஜூலை 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி ஜூலை 31 ஆகும்.
கடந்த ஆண்டு மொத்தம் 1290 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் 266 அரசு இடங்களும், 994 இடங்கள் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான மொத்த இடங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு, அவை பரிசீலிக்கப்பட்டு ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். ரேங்க் பட்டியலின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள் என தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Powered by Blogger.