Header Ads

Breaking News
recent

ரிமோட் கண்ட்ரோல் செயல் படும் விதம்

நீங்கள் தினமும் சாதாரணமாகத் தொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோலை பயன்படுத்துகிறீர்கள். அது எப்படிச் செயல்படுகிறது என்று தெரியுமா?: தெரிந்து கொள்ளுங்கள்...

ரிமோட் கண்ட்ரோல் அமைப்பு ஒரு தொடர்பு அமைப்பு ஆகும். அதில் டிரான்ஸ்மிட்டர், ரிசீவர் சிக்னல், என்ற மூன்று முக்கிய பாகங்கள் அடங்கியுள்ளன. டிவியில் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்ய, ரிமோட் கண்ட்ரோலிலுள்ள டிரான்ஸ் மீட்டர் உதவுகிறது.

 டிரான்ஸ்மிட்டரின்' ஒவ்வொரு பட்டனையும் நாம் அழுத்தும் போது அதிலிருந்து ஒரு சிக்னல், டிவியை நோக்கிச் செலுத்தபடுகிறது. அந்த சிக்னல், டிவி பெட்டியில் பெறப்படுகிறது. பின்னர், நம்முடைய உத்தரவுக்கு ஏற்ப மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.
 டிவி ரிமோட் கண்ட்ரோல் அமைப்பில் ஒவ்வொரு பட்டனுக்கும், ஒவ்வொரு பணி இருக்கிறது. ஒரு பட்டன், பிரகாசத்தைக் கூட்டும் என்றால், மற்றொரு பட்டன், பிரகாசத்தைக் குறைக்கும். ஒரு பட்டன், ஒலியைக் கூட்டினால், மற்றொன்று அதைக் குறைக்கும். வண்ணம் மற்றும் சேனல் மாற்ற என பல பட்டன்கள் உள்ளன. ஒவ்வொரு பட்டனும், அழுத்தப்படும் போது அது குறிப்பிட்ட அலைநீளத்தில் ஒரு அலையையோ, சிக்னலையோ அனுப்புகிறது.

ஒவ்வொரு சிக்னலும் டிவியில் உள்ள ரிசீவரால் வெவ்வெறு விதமாக பெறபடுகின்றன. ரீசிவரானது குறிப்பிட்ட கட்டளையை அதைக் கட்டுபடுத்தும் குறிப்பிட்ட பகுதிக்கு பிரித்து அனுப்புகிறது. கண்ணுக்குத் தெரியாத சிக்னல்கள் மூலமே உட்கார்ந்த இடத்தில் இருந்தே டிவியை இயக்க முடிகிறது. ஒவ்வொரு, ரிமோட் கண்ட்ரோல் அமைப்புகளுக்கு ஏற்ப 'சிக்னல்' வேறுபடுகிறது. டிவியை பொறுத்தவரை அகச்சிவப்புக் கதிரானது சிக்னலாக பயன்படுத்தபடுகிறது.

No comments:

Powered by Blogger.