Header Ads

Breaking News
recent

உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், தங்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இளநிலை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சிக் காலங்களில் மாதம் ரூ.8,400 உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதேபோல் முதுநிலை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ரூ.17 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது இந்த உதவித் தொகையை தில்லி, கேரள மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போன்று இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரம், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ.35 ஆயிரம் என வழங்கக் கோரி, மாநிலம் முழுவதிலும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் வியாழக்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அதன்படி, சுமார் 100 எம்.பி.பி.எஸ். மாணவ-மாணவிகள், முதுநிலை மருத்துவம் பயிலும் 35 மாணவ-மாணவிகளும் காலை 8 மணி முதல் மாலை வரை கல்லூரி முதல்வர் அலுவலகம் எதிரே அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் காரணமாக மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளைக் கவனிப்பதற்கு ஆள்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

No comments:

Powered by Blogger.