Header Ads

Breaking News
recent

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக்க வேண்டும்: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.


தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று திருவண்ணாமலை டேனிஷ்மிஷன் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 திருவண்ணாமலை டேனிஷ்மிஷன் பள்ளியில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினரின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலபொதுச்செயலர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பின்னர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியது,

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும், தற்போதுள்ள ஆசிரியர், அரசு ஊழியர் ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், தமிழகத்தில் உள்ள அரசு, அரசு மானியம் பெறும் பள்ளிகள், சுயநிதி மற்றும் சிறுபான்மை பள்ளிகள் அனைத்திலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியின் மூலமாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க அரசு சட்டம் இயற்றி அமுலாக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத காலநீட்டிப்பு வழங்கக்கோரியும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். மேலும் அனைத்து மத்திய அரசு பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும். என்று கூறினார்.

No comments:

Powered by Blogger.