Header Ads

Breaking News
recent

ஜிப்மர்-மிச்சிகன் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: பொது சுகாதாரத்தில் கூட்டு ஆராய்ச்சி

பொது சுகாதாரத்தில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வது உள்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக ஜிப்மர் மருத்துவமனை-மிச்சிகன் பல்கலைக்கழகம் இடையே திங்கள்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் டிஎஸ்.ரவிக்குமார், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக பொதுச் சுகாதாரப் பள்ளி டீன் டாக்டர் மார்ட்டின் பில்பர்ட் ஆகியோர் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஜிப்மர் மருத்துவமனை கடந்த 1964-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனால் திறந்து வைக்கப்பட்டதுஅதன் பொன்விழா
ஆண்டை முன்னிட்டு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஜிப்மர் பொதுச் சுகாதாரப் பள்ளி, புற்றுநோய் மருந்தியல் சிறப்பு பிரிவு உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளன. ஓராண்டு முழுவதும் பொன்விழா கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மிச்சிகன் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
 இதன்படி  முதல்கட்டமாக குழந்தைகள்-பெண்கள் மருத்துவம், சிறுநீரகப்பிரிவு போன்றவற்றில் ஆய்வுத் திட்டங்கள் செய்யப்படும். குறிப்பாக பொதுமக்கள் மருத்துவமனையை நாடி வராதவகையில் நோய்கள் ஏற்படுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
மேலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், அறிவியல் இதழ்களை வெளியிடுதல்,
பாடங்கள் பயிற்றுவிப்பதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், இரு
நிறுவனங்களும் இணைந்து கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்துவது,
பேராசிரியர்கள் பரிமாற்றம் மேற்கொள்வது உளளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகள் அமுலில் இருக்கும்.இதுகுறித்து ஜிப்மர் இயக்குநர் டாக்டர் ரவிக்குமார் கூறியதாவது: ஏற்கெனவே ஜிப்மர் மருத்துவமனை பல்வேறு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. பொன்விழா ஆண்டை முன்னிட்டு பல்வேறு மக்கள் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஏழை, எளிய மக்கள் தரமான சிகிச்சை பெறுவதற்காக அரசு உதவியோடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை கேட்டுóள்ளோம். அவரிடம் இருந்து அனுமதியை எதிர்பார்த்துள்ளோம் என்றார் ரவிக்குமார். மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ராஜிவ் சரணன், மாத்யூ போல்டன், ஜிப்மர் டீன் டாக்டர் மகாதேவன் உடனிருந்தனர்.

No comments:

Powered by Blogger.