Sunday, May 25 2025

Header Ads

பாரதிதாசன் பல்கலை. தொலைக் கல்வி மையத்தில் எம்.எட். படிப்புக்கு அனுமதி

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக் கல்வி மையத்தில் எம்.எட். படிப்பை நடத்துவதற்கு   தென் மண்டலத்திற்கான தேசியக் கல்விக் குழுமம் அனுமதி வழங்கியுள்ளதுஇதைத் தொடர்ந்து 2014-15-ம் ஆண்டிற்கான முதுகலைக் கல்வியியல் (எம்.எட்) படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் அண்மையில் தொடக்கி வைத்தார். இம்மாதம் 25-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும், இப்பிரிவில் 250 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.