Header Ads

Breaking News
recent

ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் இன்று தேசிய கருத்தரங்கம் தொடக்கம்



புதுச்சேரி குருமாம்பேட்டில் உள்ள ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் (ரிவர்) கால்நடை மருத்துவம் மற்றும் இதர அறிவியலில் புரோடியோமிக்ஸ் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் வெள்ளி, சனி ஆகிய 2 நாள்கள் நடக்கிறது.
உயிர் தொழில்நுட்பவியல் மூலம் புரதக்கூறுகளை ஆராய்ந்து அவற்றை மனிதர்கள் மற்றும் கால்நடைகள் நோய் களைவதற்கான ஆதாரமாக பயன்படுத்துவதே கருத்தரங்கின் முக்கிய நோக்கம் ஆகும்.
மருத்துவ புரோடியோமிக்ஸ் மூலம் நோய்களை கண்டறிவதற்கான உயிர்குறிப்பான்கள், நோய் தாக்கீட்டுத்தன்மை, அவற்றின் தீர்வு குறித்து அறியலாம். இரண்டு நாள்கள் நடைபெறும் கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மருத்துவர்கள்,
விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர் என டீன் திலகர் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.