Header Ads

Breaking News
recent

தமிழ்ப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வித் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
   இதுகுறித்து பல்கலைக்கழகக் கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சி. சுந்தரேசன் தெரிவித்திருப்பது:
   தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைநிலைக் கல்வியில் மே மாதம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
   தற்போது முதுநிலை தமிழிசை முதலாமாண்டு, இளநிலை கணினிப் பயன்பாட்டியல், இளநிலை வணிக மேலாண்மை, இளநிலை தமிழ் முதலாமாண்டு, இரண்டாமாண்டு, இளநிலை தமிழ் இலக்கியம் முதலாமாண்டு, இளநிலை ஆங்கிலம், இளநிலை வரலாறு முதலாமாண்டு, இளநிலை புவியியல் முதலாமாண்டு, இரண்டாமாண்டு, இளநிலை வணிகவியல் முதலாமாண்டு, பட்டயப் படிப்பில் சுவடியியல், மூலிகை அழகுக்கலை, பேச்சுக்கலை, மலையாளம், மரபுவழித் தமிழ் மருத்துவம், சான்றிதழ் படிப்பில் பரதநாட்டியம், நூலகம், தகவலறிவியல் ஆகிய தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
   தேர்வு முடிவுகளை www.tamiluniversity.ac.in மற்றும் www.tamiluniversitydde.org என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Powered by Blogger.