Header Ads

Breaking News
recent

மருத்துவம் சார் படிப்புகள்: 6,167 விண்ணப்பங்கள் விநியோகம்

மருத்துவம் சார் பட்டப் படிப்புக்களில் சேருவதற்கு முதல் நாளான திங்கள்கிழமை (ஜூலை 7) 6,167 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பி.எஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஓடி உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப்படிப்புகளுக்கான
விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்படுகின்றன.
இது குறித்து தேர்வுக்குழு அதிகாரிகள் கூறியது:

மொத்தம் 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. முதல் நாளான திங்கள்கிழமை 6,167 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஜூலை 18-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ. 350 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி ஜூலை 19 ஆகும் என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் விவரங்களுக்கு
www.tnhealth.orgg

No comments:

Powered by Blogger.