Header Ads

Breaking News
recent

கொல்கத்தா பல்கலையில் எம்.பி.ஏ. படிப்பு

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் சேர விரும்புவோர், அங்கீகரிக்கப்பட்ட ஏதேனுமொரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், MAT/JEMAT /XMAT உள்ளிட்ட தேசிய நிலை தேர்வுகளில் ஒன்றில், குறைந்தபட்சம் 40% மதிப்பெண் பெற்றவர்கள் மேற்கண்ட MBA படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.caluniv.ac.in/admission/MBA_BM_2014.html என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் விபரங்களை அறியலாம்.

விண்ணப்பிக்கும் கடைசித் தேதி - ஜுலை 28.

குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் - ஜுலை 30 மற்றும் 31

No comments:

Powered by Blogger.