Header Ads

Breaking News
recent

பி.ஆர்க். கலந்தாய்வு: ஜூலை 21-ல் தொடக்கம்

கட்டடவியல் பொறியியல் படிப்பான பி.ஆர்க். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடத்தப்பட உள்ளது.

பி.இ., பி.டெக். படிப்புகளைப் போல் ஐந்தாண்டு பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்) படிப்புக்கும் ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

இந்தப் படிப்பின் கீழ் அண்ணா பல்கலைக்கழக துறைகளில் ஒன்றான கட்டடவியல் திட்டப் பள்ளியில் 76 இடங்கள் உள்பட அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான 1,564 இடங்களோடு சேர்த்து 1,640 இடங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் தனியார் கல்லூரிகள் சில நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 29 இடங்களை கலந்தாய்வுக்கு ஒப்படைத்துள்ளன. இதனால், பி.ஆர்க். கலந்தாய்வில் இடம்பெற்றிருக்கும் இடங்களின் எண்ணிக்கை 1,669-ஆக உயர்ந்துள்ளது. 2,421 பேர் விண்ணப்பம்:

பி.ஆர்க். கலந்தாய்வுக்கு ஜூன் 2-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் 2,421 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

மூன்று நாள்:

இந்தப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடத்த உள்ளது. தினமும் காலை 9 மணிக்குத் தொடங்கி 7 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இறுதிச் சுற்று மாலை 6.30 மணிக்குத் தொடங்கும்.

முதல் நாளில் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பின்னர் கட்-ஆஃப் 310.50 பெற்றவர்கள் முதல் குறைந்தபட்சம் 289.50 பெற்றவர்கள் வரை முதல் நாள் கலந்தாய்வில் அனுமதிக்கப்பட உள்ளனர். இரண்டாம் நாளில் கட்-ஆஃப் மதிப்பெண் 286.60 பெற்றவர்கள் முதல் 272.20 வரை பெற்றவர்ளும், மூன்றாம் நாளில் கட்-ஆஃப் 270.60 முதல் குறைந்தபட்சம் 259 கட்-ஆஃப் பெற்றவர்கள் வரை அழைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


No comments:

Powered by Blogger.