Header Ads

Breaking News
recent

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினார்கள்.

வனச்சரகர் பணிக்கான தேர்வில் அடிப்படை கல்வி தகுதியாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத் தால் அங்கீகரிக்கப்பட்ட 4 வருட தொழிற் படிப்பான இளங்கலை வனவியல் பட்டபடிப்பை அறிவித்து அரசு ஆணை வெளியிட வேண்டும்.

உதவி வனப்பாதுகாவலர் பணியிடங்களில் முதுநிலை வனவியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 2011–ம் ஆண்டு நடைபெற்ற வனச்சரகர் பணிக்கான நிலுவையில் உள்ள வனச்சரகர் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வனவியல் இளங்கலை, முதுநிலை மாணவர்கள் கடந்த 22–ந் தேதி முதல் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருப்பு துணி கட்டி போராட்டம்

போராட்டத்தின் 9–வது நாளான நேற்று (30–ந் தேதி) வனக்கல்லூரி மாணவ–மாணவிகள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 41 மாணவிகள் உள்பட 145 பேர் கலந்து கொண்டனர்.

No comments:

Powered by Blogger.