Header Ads

Breaking News
recent

, மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் சப்–ஜூனியர் நீச்சல் போட்டி

கோவை மாவட்ட நீச்சல் கழகம் சார்பில், எல்.அடைக்கலராஜ் நினைவு கோப்பைக்கான, மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் சப்–ஜூனியர் நீச்சல் போட்டி, கோவை–அவினாசி ரோட்டில் உள்ள ஜென்னி ரெசிடென்சி நீச்சல் குளத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. போட்டிகளின் முடிவில் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றவர்களின் விவரம் வருமாறு:–

குரூப்–1 மாணவர்கள் பிரிவில் 35 புள்ளிகள் பெற்ற கென்னடி மெட்ரிக் பள்ளி மாணவர் ஷாம், மாணவிகள் பிரிவில் 35 புள்ளிகள் பெற்ற பாரதீய வித்யாபவன் பள்ளி மாணவி விஷ்ணுஸ்ரீ, குரூப்–2 மாணவர்கள் பிரிவில் 35 புள்ளிகள் பெற்ற நவபாரத் பள்ளி மாணவர் ஜவகர்வேல், மாணவிகள் பிரிவில் பாரதீய வித்யாபவன் பள்ளி மாணவி பாவிகாதுகார் ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
தனிநபர் சாம்பியன்

குரூப்–3 மாணவர்கள் பிரிவில் 31 புள்ளிகள் பெற்ற பெர்க்ஸ் பள்ளி மாணவர் ஹரிபங்கன் விஜய், மாணவிகள் பிரிவில் 35 புள்ளிகள் பெற்ற யுவபாரதி பள்ளி மாணவி ரேஷ்மி, குரூப்–4 மாணவர்கள் பிரிவில் 33 புள்ளிகள் பெற்ற பி.கே.டி. மெட்ரிக் பள்ளி மாணவர் பாலாஜி, மாணவிகள் பிரிவில் 35 புள்ளிகள் பெற்ற அமிர்த வித்யாலயா பள்ளி மாணவி புவனா ஆகியோர் தனிநபர் சாம்பியன்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

குரூப்–5 மாணவர்கள் பிரிவில் 28 புள்ளிகள் பெற்ற அமிர்த வித்யாலயா பள்ளி மாணவர் ரோகன், மாணவிகள் பிரிவில் 21 புள்ளிகள் பெற்ற கே.எஸ்.ஐ.ஆர்.எஸ். பள்ளி மாணவி நிதீலா, குரூப்–6 மாணவர் கள் பிரிவில் 18 புள்ளிகள் பெற்ற அமிர்த வித்யாலயா பள்ளி மாணவர் சந்தீவ், மாணவிகள் பிரிவில் 7 புள்ளிகள் பெற்ற எஸ்.எஸ்.வி.எம். பள்ளி மாணவி ஆத்விகா ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

455 புள்ளிகளுடன் அமிர்த வித்யாலயா பள்ளி மாணவ–மாணவிகள் முதல் இடமும், 393 புள்ளிகளு டன் எஸ்.எஸ்.வி.எம். பள்ளி மாணவ–மாணவிகள் 2–வது இடமும், 318 புள்ளிகளுடன் நவபாரத் பள்ளி மாணவ–மாணவிகள் 3–வது இடமும் பெற்றன. போட்டிகளை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற் றது.

No comments:

Powered by Blogger.