Header Ads

Breaking News
recent

காருண்யா பல்கலைக்கழகத்தில் புதிய எம்.டெக் படிப்பு

காருண்யா பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப துறையும்,நோவல் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து புதிய எம்.டெக். படிப்பை அறிமுகம் செய்துள்ளன.இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து தகவல் தொழில் நுட்பத்தில் எம்.டெக் படிப்பை தொடங்குவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய படிப்பில் மாணவர்கள் தங்களது கணினி மென்பொருள் உருவாக்க திறன்களை எளிதாக வளர்த்துக்கொள்ளும் வகையில் பாட திட்டங்களையும்,ஆய்வக பயிற்சிகளையும் உருவாக்கி உள்ளனர்.

புதிய எம்.டெக் படிப்பின் அறிமுக நிகழ்ச்சியும் நோவல் சிறப்பு மையத்தின் திறப்பு விழாவும் காருண்யா பலகலைக்கழகத்தில் நடந்தது.பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் மனோகரன்,நோவல் பயிற்சியாளர் லினட் மிராண்டா மற்றும் நெட் ஐகியூ விற்பனை சிறப்பு விற்பனை மேலாளர் ராபின்சன் பாலு முன்னிலையில் நோவல் சிறப்பு மையம் திறந்து வைக்கப்பட்டது.பல்கலைக்கழக பதிவாளர் ஜோசப் கென்னடி மற்றும் துறை இயக்குனர் எலைஜா பிளசிங், துறை தலைவர் தினேஷ் பீட்டர் ஆகியோர் உடன் இருந்தனர்.

புதிய எம்.டெக் படிப்புக்கான ஒப்பந்தத்தை காருண்யா பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர்மனோகரன்,நோவல் பயிற்சியாளர் லினட் மிராண்டா ஆகியோர் பரிமாறிக் கொண்ட போது எடுத்த படம். அருகில் பல்கலைக்கழக பதிவாளர் ஜோசப் கென்னடி,துறை இயக்குனர் எலைஜா பிளசிங் ஆகியோர் உள்ளனர்.

No comments:

Powered by Blogger.