Header Ads

Breaking News
recent

தமிழ் மொழியை கட்டாயம் பயில வேண்டும் என்ற சட்டத்திற்கு எதிரான வழக்கு: பள்ளிக் கல்வித்துறை ஒருவாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு

தமிழ் மொழியை கட்டாயம் பயில வேண்டும் என்ற சட்டத்திற்கு எதிரான வழக்கில், பள்ளிக் கல்வித் துறை ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக அரசுப் பள்ளிகளில் தெலுங்கு வழி கல்வி பயிலும் மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி ராமசுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதன் மீது ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் தமிழ் மொழியை கட்டாயமாக பயில வேண்டும் என்ற சட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டதாகவும், ஆனால், தாங்கள் பயிலும் பள்ளியில் தமிழ் ஆசிரியர் இதுவரை நியமிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

 மேலும், கடந்த 9 ஆண்டுகளாக ஆசிரியர் நியமிக்கப்படாமலேயே தமிழ் மொழி பாடத்தில் தங்களை தேர்ச்சிபெற செய்துவிட்டதாகவும், ஆனால், நடப்புக் கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள தங்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் மாணவர்களின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எனவே, தமிழ் மொழிப்பாடத்தை கட்டாயம் பயில வேண்டும் என்ற சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாணவர்களின் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.