Header Ads

Breaking News
recent

நாகையில் ஆக. 13-ல் வனாமி இறால் வளர்ப்பு தொழில்நுட்ப கருத்தரங்கம்

நாகை மீன்வளப் பல்கலைக்கழகம் மூலம் வனாமி இறால் வளர்ப்பு தொழில்நுட்ப கருத்தரங்கம் ஆக. 13-ம் தேதி நாகையில் நடைபெறுகிறது என மீன்வளப் பல்கலைக்கழக மீன்வளத் தொழில் நுட்ப நிலைய இயக்குநர் மு. நாகூர் மீரான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

இறால்களைத் தாக்கும் வெண்புள்ளி வைரஸ் நோய்க் காரணிகள் நீக்கப்பட்ட வனாமி இன இறால்கள் கடந்த 2010-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், 2010-ம் ஆண்டில் 1 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த இறால் உற்பத்தி, 2013-14-ம் ஆண்டில் 3 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்தது.

இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் வனாமி இறால் வளர்ப்பில்,  தொழில்நுட்பக் காரணங்களால் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன. இதனால், இந்த ஆண்டில் கணிசமான உற்பத்தி குறைவும், வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, வனாமி இறால் வளர்ப்புக்கேற்ற புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில் நுட்பங்களை தமிழகத்தில் உள்ள வனாமி இறால் பண்ணையாளர்களிடம் கொண்டுச் செல்லும் வகையில், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மூலம் ஆக. 13-ம் தேதி நாகையில் வனாமி இறால் வளர்ப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

நாகை பெருமாள் கோவில் வடக்கு வீதியில் உள்ள எஸ்.ஆர்.எல் மகாலில் காலை 10 மணிக்கு இந்தக் கருத்தரங்கம் தொடங்கப்படும். தமிழகத்தில் உள்ள வனாமி இறால் பண்ணையாளர்கள் அனைவரும் இந்தக் கருத்தரங்கத்தில் பங்கேற்கலாம்.

கருத்தரங்கத்தில் பங்கேற்க விரும்பும் இறால் பண்ணையாளர்கள் பதிவுக்கட்டணம் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். பதிவுக்கான விவரங்களுக்கு 04365- 240441, 240442, 94437 84437, 99525 57799 ஆகிய தொலைத் தொடர்பு எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.