Header Ads

Breaking News
recent

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருநங்கைகளுக்கான மனித உரிமைகள் குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக அரசியல் அறிவியல் துறை மற்றும் பொது நிர்வாகப்பிரிவு சார்பில் திருநங்கைகளுக்கான மனித உரிமைகள் என்ற தலைப்பிலான ஒருநாள் பயிற்சி வகுப்பு பல்கலைக்கழக நூலக அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் ஆர்.எம்.சந்திரசேகரன் தலைமை வகித்துப் பேசுகையில் மனிதர்களை, மனிதர்களாக நடத்தும் மாண்பு பற்றி எடுத்துரைத்தார். கலைப்புல முதல்வர் முனைவர் ஆர்.ராஜேந்திரன் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசுகையில் திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் தெரிவித்தார். தேசிய மனித உரிமைகள் பயிற்சி பிரிவு மூத்த அதிகாரி எஸ்.கே.ஜெயின் சிறப்புரையாற்றினார்.

பயிற்சி வகுப்பில் சர்வதேச மனித இரிமைகள் பிரகடனங்கள் மற்றும் ஒப்பந்தங்கள், இந்திய அரசியலமைப்பு சட்ட ரீதியான மனித உரிமை ஷரத்துக்கள், மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993, தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையங்கள் மற்றும் அதன் பணிகள், ஐ.நா-வின் 1979 ஆண்டு பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளை களைவதற்கான ஒப்பந்த், குழந்தைகள், பெண்கள், உரிமைகள், திருநங்கைகளின் உரிமைகள், அவர்களது சமூக பொருளாதார நிலை, திருநங்கைகளின் உளவியல் நலம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.