Header Ads

Breaking News
recent

தாய்ப்பால் விழிப்புணர்வு: கோவையில் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலம்

உலக தாய்ப்பால் வாரவிழாவையொட்டி கோவை மருத்துவ கல்லூரி மருத்துவ மனை சார்பில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி போலீஸ் கமிஷனர் அலுவலகம், மத்திய மண்டலம்வழியாக கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தை அடைந்தது. ஊர்வலத்தில் அரசு மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள், மருத்துவர்கள் தாய்ப்பால் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திச்சென்றனர். இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் ரேவதி கூறியதாவது:-

குழந்தை பிறந்து 6 மாதத்துக்கு தாய்மார்கள் கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். புட்டிப்பால் கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். ஆகவே குழந்தைகளின் அறிவாற்றலை அதிகரிக்க தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்பதை உணரவேண்டும். பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் அதிக ரத்தப்போக்கு, மார்பக புற்றுநோய் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் தாய்ப்பால் தரவேண்டும்.  பொதுவாக புட்டிப்பாலில் பிளாஸ்டிக் நச்சு கலக்கும் நிலையிருக்கிறது. ஆகவே அதனை தவிர்த்து, தாய்ப்பாலில் தான், அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கி உள்ளன என்பதை அறிந்து அதை குழந்தைக்கு கொடுக்க மறந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Powered by Blogger.