Header Ads

Breaking News
recent

அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது: அமைச்சர் செல்லூர் ராஜூ

பள்ளிக் கல்வித் துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களின் வாயிலாக அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

 மதுரை திருநகர் சவிதாபாய் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் அவர் பேசியது:

 கடந்த 3 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறையில் 53 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நிலை மாணவர்களின் கல்விக்குத் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு விலையில்லா சீருடை, நோட்டுப் புத்தகம், மிதிவண்டி, மடிக்கணினி, கற்றல் உபகரணங்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இடைநிற்றலைத் தவிர்ப்பதற்காக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களால் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
 மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மதுரை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முத்துராமலிங்கம், துணை மேயர் கு.திரவியம், பள்ளித் தாளாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.எம்.சீனிவேல், முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.

No comments:

Powered by Blogger.