Header Ads

Breaking News
recent

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் விரைவில் விவசாயப்பள்ளி தொடங்கப்படும் : பாரிவேந்தர்

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் சட்டப்பள்ளியைத் தொடர்ந்து விவசாயப்பள்ளியும் தொடங்கப்படும் என அதன் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை அருகேயுள்ள காட்டாங்கொளத்தூரில் அமைந்திருக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் புதிய சட்டப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய பாரிவேந்தர், தங்களது கல்வி நிறுவனத்தின் சார்பில் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். அதன் தொடர்ச்சியாக, சட்டப் படிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தற்போது அதற்கான கல்வி நிறுவனமும் தொடங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதனை மாணவர்கள் தங்களது முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். எஸ்ஆர்எம் நிறுவனம் சார்பில் விரைவில் விவசாயப்பள்ளியும் தொடங்கப்படும் என்று பாரிவேந்தர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியைச் சேர்ந்த பெண் நீதிபதிகள் கேத்ரின், மேரி எலன் பார்பரா, எஸ்ஆர்எம் சட்டக்கல்லூரி டீன் பேராசிரியர் பாலு, பதிவாளர் சேதுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அவர்கள், சட்டக்கல்வி பயில்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தங்களது ஆலோசனைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியைச் சேர்ந்த பெண் நீதிபதிகள் கேத்ரின் மற்றும் மேரி எலன் பார்பரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

No comments:

Powered by Blogger.