Header Ads

Breaking News
recent

பள்ளி கல்வித்துறை சார்பில் 10-வது மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆய்வுக்கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பில் 10-வது மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆய்வுக்கூட்டம் மண்டல வாரியாக 10 நாட்கள் நடைபெற உள்ளது.

பள்ளி கல்வித்துறையின் செயலாளர் த.சபீதா மற்றும் பள்ளி கல்வித்துறையின் அதிகாரிகள் ஆகியோர் எடுத்த கடும் முயற்சி காரணமாக 2013-ம் ஆண்டை விட 2014-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து இந்த வருடமும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து அவற்றில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில், பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாணவ-மாணவிகளை நன்றாக தயார்படுத்துவது குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட உள்ளது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, முதன்மை செயலாளர் த.சபீதா, அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை, இணை இயக்குனர்கள் கருப்பசாமி, கார்மேகம், பழனிச்சாமி, உஷா, ராஜேந்திரன், லதா, செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். இந்த கூட்டம் இன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டலத்தில் நடக்க உள்ளது. மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ளது.

No comments:

Powered by Blogger.