Header Ads

Breaking News
recent

டி.என்.பி.எஸ்.சி உதவி பொறியாளர் தேர்வு முடிவு வெளியீடு


தமிழக அரசில் உதவி பொறியாளர் பதவியில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேர்வில், சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் இலவச பயிற்சி பெற்ற 43 பேர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில், மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி, வசுந்தரா வெற்றி ஆகியோர் நடத்தும் மனிதநேய அறக்கட்டளை சார்பில், பல்வேறு மத்திய-மாநில அரசு பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி அளிக்க மனிதநேய பயிற்சி மையம் நடத்தப்படுகிறது.

கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதநேய பயிற்சி மையம் நடத்தும் இலவச பயிற்சியில் கலந்து கொண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., துணை கலெக்டர், டி.எஸ்.பி., போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வுகளுக்காக இலவச பயிற்சி பெற்று இதுவரை 2,235-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் தேர்வு பெற்று பணியில் உள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், தமிழக அரசில் பணிபுரிய 98 உதவி பொறியாளர்கள் தேர்வுக்கான அறிவிப்பு 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதற்காக 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வெற்றிபெற்றவர்களின் பட்டியல் இந்த ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி வெளியிடப்பட்டது. எழுத்து தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு 22-ந் தேதி முதல் 25-ந் தேதிவரையிலும், மீண்டும் 28-ந் தேதியும் நேர்முகத்தேர்வு நடந்தது.

நேர்முகத்தேர்வில், என்னென்ன வகையான கேள்விகள் கேட்கக்கூடும்?, அதற்கு எத்தகைய பதிலை தரவேண்டும்?, நேர்முகத்தேர்வை எப்படி எதிர்நோக்க வேண்டும்? என்பதுபோன்ற பயிற்சிகளை மனிதநேய மையத்தின் சார்பில் ஜூலை 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அளிக்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.