Header Ads

Breaking News
recent

பி.எட் படிப்புகள் கலந்தாய்வு இன்றுடன் நிறைவுபெறுகிறது.

கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில், 4 பாடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 140 பேர் கலந்து கொண்டனர். கலந்தாய்வு இன்றுடன் (சனிக்கிழமை) நிறைவுபெறுகிறது.
பி.எட் படிப்புகள்

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 16 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும், 649 சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் என 672 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப் பப்பட்டு வருகிறது.

2014–15–ம் கல்வி ஆண்டில், பி.எட் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னை, மதுரை, சேலம் மற்றும் கோவையில் நடைபெற்று வருகிறது. இதன்படி கோவையில் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ–மாணவிகள் பங்கேற்றனர்.
சான்றிதழ்கள் சரிபார்ப்பு

தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், பொருளியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நிறைவுபெற்றது. அதன்தொடர்ச்சியாக நேற்று இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மொத்தம் 140 மாணவ–மாணவிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அப்போது மாணவ–மாணவிகளின் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் ஆகியவை சரிபார்க்கப்பட்டு, தகுதிகளின் அடிப்படையில் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இன்றுடன் (சனிக்கிழமை) பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.

இந்த தகவலை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் இந்திராணி தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.