Header Ads

Breaking News
recent

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படிப்பு

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை துறையின் கீழ் நடைபெறவுள்ள பிஎச்டி படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தகுதி: முதுகலையில் வணிக மேலாண்மை, மனித வள மேலாண்மை, காமர்ஸ், சோஷியல் சயின்ஸ், ஹூயூமானிட்டிஸ், அறிவியல், சட்டம், நூலக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை; www.caluniv.ac.in அல்லது www.bmcaluniv.org என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செப்.,19 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Powered by Blogger.