Header Ads

Breaking News
recent

உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற ஆங்கில அறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும் - என்.ஐ.டி. இயக்குநர் எஸ்.கே.பாண்டே பேச்சு

 உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற ஆங்கில அறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டுமென காரைக்கால் என்.ஐ.டி. இயக்குநர் எஸ்.கே.பாண்டே வலியுறுத்தினார்.

புதுச்சேரி அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி நெடுங்காடு பகுதியில் செயல்படுகிறது. இக்கல்லூரியில் 8-வது பேட்ச், பி.டெக் முதலாமாண்டு வகுப்பு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் காரைக்கால் என்.ஐ.டி. இயக்குநர் எஸ்.கே.பாண்டே சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது, காரைக்காலில் என்.ஐ.டி. இயங்குகிறது. தற்போது தாற்காலிக கட்டடத்தில் இயங்கினாலும் நிரந்தர கட்டடம் கட்டுமானப் பணி விரைவாக நடந்துவருகிறது. பல மாநிலத்தவர் இக்கல்லூரியில் படிக்கின்றனர். பொறியியல் மற்றும் பிற கல்லூரிகளிóன் மாணவர்களின் அறிவுத் திறன் மேம்பாட்டுக்குத் தேவையான  உதவிகளை செய்ய என்.ஐ.டி. தயாராக உள்ளது.

உயர்கல்விக்கான ஆர்வம் மாணவர்களிடையே பெருகியுள்ளது. அதே வேளையில் தேசிய அளவில் கடுமையான போட்டி நிலவுகிறது. அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு மாணவர்கள் வெற்றிபெறவேண்டுமானால், சிறந்த ஆங்கில அறிவு அவசியாகிறது. இதனை மாணவர்கள் பள்ளி, கல்லூரி காலத்திலேயே வளர்த்துக்கொள்ளவேண்டும். பொறியியல் கல்வி மூலம் சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையுடன் கல்வியை பயிலவேண்டுமென மாணவர்களிடையே அறிவுறுத்தினார் பாண்டே.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பி.தம்பிதுரை வரவேற்றுப் பேசினார். கல்லூரியில் மாணவர்களுக்கு உள்ள பாடப் பிரிவுகள், வசதிகள், வேலைவாய்ப்புக்கு கல்லூரி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளை அவர் விளக்கினார். முடிவில் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் எம்.ஆராமுதன் நன்றி கூறினார். காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் ஆ.சுரேஷ், கல்லூரி நிர்வாக அதிகாரி சி.ராகவன், முதுநிலை கணக்கு அதிகாரி ஆர்.துரைராஜன், பெற்றோர் சங்கத் தலைவர் கோபிநாத், இணை செயலர் எஸ்.வைத்தியநாதன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Powered by Blogger.