Header Ads

Breaking News
recent

காந்தி மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

காந்திய சிந்தனைகளை பரப்பும் வகையில் காந்திமன்றம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி, கையெழுத்துப் போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வருகிற ஆக.15-ம் தேதி வெள்ளிக்கிழமை சிதம்பரம் வாகீசநகர் காந்திமன்றத்தில் போட்டிகள் நடைபெறுகிறது.

போட்டிகள் விபரம்: 4,5 வகுப்பு மாணவர்களுக்கு காந்தியடிகளின் பொன்மொழிகள் ஏதேனும் 20 மனப்பாடம் செய்து பிழையின்றி எழுதும் கையெழுத்துப் போட்டி, 6,7,8 மாணவர்களுக்கு காத்தியடிகளின் பொன்மொழிகள் ஏதேனும் 40 மனப்பாடம் செய்து பிழையின்றி எழுதும் கையெழுத்துப் போட்டி, 9,10-ம் வகுப்பு மாணவர்குக்கு காந்தியடிகளின் வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உப்பு சத்தியாக்கிரகம் அல்லது தென்னாப்பிரிக்காவில் காந்தி என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி (200 வார்த்தைகள் மிகாமல் இருக்க வேண்டும்).

போட்டியில் பங்கேற்போர் கவனத்திற்கு: போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் தங்களது மாணவர்களின் பெயர் பட்டியலை ஆக.12-ம் தேதிக்குள் காந்திமன்றம், எண்:67, இரண்டாவது மெயின்ரோடு, வாகீசநகர், சிதம்பரம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும், முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும் காந்திமன்றத்தில் நடைபெறவுள்ள காந்திஜெயந்தி விழாவில் வழங்கப்படும் என காந்திமன்றத் தலைவர் பொன்.குஞ்சிதபாதம் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.