Header Ads

Breaking News
recent

கல்வித் தரத்தை உயர்த்த அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை

கல்வித் தரத்தை உயர்த்த தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மாணவர்களின் நலனில் போதிய அக்கறை கொண்டுள்ளதாகவும், அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசின் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட்ட பின்னர், மாணவர் சேர்க்கை தகுதி அடிப்படையில் நடைபெறுவதாகவும், 69 சதவிகித இடஒதுக்கீட்டு கொள்கை நடைமுறைப் படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

முதல் பட்டதாரிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், மாணவர் பிரச்னைகளை தீர்ப்பதில் பல்கலைக்கழக நிர்வாகம் விரைந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், மாணவர்களில் ஒரு பிரிவினர் சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா சுட்டிக் காட்டியுள்ளார்.

 மேலும், மாணவிகளுக்கு விடுதி வசதி செய்து தரும் வகையில் மாணவர் விடுதி ஒன்று ஏற்கனவே மாணவிகளுக்கு மாற்றப்பட்டு, பணிகள் நடைபெற்று வருவதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

No comments:

Powered by Blogger.