Header Ads

Breaking News
recent

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தவளை போன்ற உயிரினங்களை அறுத்து ஆய்வு செய்ய தடை

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் தவளை போன்ற உயிரினங்களை அறுத்து ஆய்வு செய்ய பல்கலைக்கழக மானியக்குழு தடை விதித்துள்ளது.

பீட்டா என்ற அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியதின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான உயிரினங்கள் அதன் வாழ்விடங்களில் இருந்து பிடிக்கப்பட்டு அறுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவதாகக் கூறிய பல்கலைக்கழக மானியக்குழு, இதுபோன்ற செயல்களால் பல்வேறு வகையான தவளை இனங்கள் அழியும் சூழலுக்கான அறிகுறிகள் தோன்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் உயிரியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளைச் சேர்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் உயிரினங்களை அறுத்து ஆய்வு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 2011ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பாதுகாக்கப்படாத உயிரினங்களை முதுநிலை மாணவர்கள் அறுத்து ஆய்வு செய்யலாம் என்றும், ஆசிரியர்களும் அவற்றை ஆய்வு செய்து பாடம் எடுக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

No comments:

Powered by Blogger.