பாரதியார் பல்கலை: எம்சிஏ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2014-15ம் கல்வியாண்டில் எம்.சி.ஏ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இப்படிப்புக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2வில் கணிதம் அல்லது வணிககணிதம் பாடத்தை எடுத்து படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் கையேடுகளை தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ரூ.500 விண்ணப்பக் கட்டணம். எஸ்சி, எஸ்டி., பிரிவினர் ரூ.250.
பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் (BUMCAET 2014) நுழைத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
ஆகஸ்ட் 18 விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 20ம் தேதி நடத்தப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
No comments: