Header Ads

Breaking News
recent

யூ.பி.எஸ்.சி மத்திய அரசு பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வு நாளை


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் என்கிற யூ.பி.எஸ்.சி மத்திய அரசு பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வு  நாளை நடைபெற உள்ளது.

இதில். சி- சாட் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து யூபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள், நாளை நடைபெறவுள்ள  இந்த தேர்வுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்து இருந்தனர். நாளை தேர்வு நடைபெற இருந்த நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆங்கில மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது. 9 லட்சம் தேர்வர்கள் எழுத தயாராக உள்ள நிலையில் தேர்வுக்கு தடைவிதிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து திட்டமிட்டப்படி நாளை தேர்வு நடைபெறும்.

No comments:

Powered by Blogger.