Header Ads

Breaking News
recent

யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு

யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வை இன்று நாடு முழுவதும் 9 லட்சம் பேர் எழுதுகின்றனர்.எனவே இந்தத் தேர்வை ஒத்திவைக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

யு.பி.எஸ்.சி தேர்வின் இரண்டாம் தாளில் ஆங்கில திறனறிதல் பகுதி, மாநில மொழியை மட்டுமே அறிந்தவர்களுக்கு கடினமாக உள்ளதால், அந்த பகுதியை நீக்க வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலும் இந்த பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, யு.பி.எஸ்.சி தேர்வில் ஆங்கில திறனறிதல் பகுதி மதிப்பீட்டில் சேர்த்துக் கொள்ளப்படாது என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் ஆங்கில திறனறிதல் பகுதி தொடர்பான பிரச்னையை சுட்டிக்காட்டி சில தேர்வர்கள் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பிரச்னை தீர்க்கப்பட்டுள்ள நிலையில், தேர்வை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தனர் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 61 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

No comments:

Powered by Blogger.