Header Ads

Breaking News
recent

கல்வி உதவித் தொகையை அஞ்சல்சேமிப்பு முறையில் வழங்க வலியுறுத்தல்

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண் குழந்தைகளுக்கு அஞ்சல் சேமிப்பு முறையில் கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டணியின் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீóர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
திருச்சி மாவட்டத்தில் கற்பிப்பு மானிய நிலுவை மற்றும் ஊதிய உயர்வு நிலுவைகள் ரூ.1 கோடிக்கு மேல் வழங்கப்படாமல் உள்ளது. இத்தொகையை வழங்க மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெற 4 வகையான சான்றுகள் பெற்று விண்ணப்பித்து பல மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. எனவே பள்ளிகளை ஆய்வு செய்து தொடர் அங்கீகாரம் வழங்க வேண்டும்.

பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் திருச்சி மேற்கு சரக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தை சுப்பிரமணியபுரத்திலுள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்துக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ம.சேவியர் பால்ராஜ் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் சே. நீலகண்டன் தீர்மானங்களை விளக்கிச் சிறப்புரையாற்றினார். வட்டாரச் செயலர்கள் அமல் சேசுராஜ், ராபர்ட் அந்தோனிராஜ்,மாவட்டப் பொருளாளர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Powered by Blogger.