Header Ads

Breaking News
recent

பள்ளிகளில் மாணவ- மாணவிகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் மாணவ- மாணவிகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்று அமைச்சர் பி.பழனி யப்பன் தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டம் அதிய மான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத் தில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் விவே கானந்தன் தலைமை தாங்கி னார். விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு 9 பள்ளிகளை சேர்ந்த 1510 மாணவ- மாணவிகளுக்கு ரூ.53 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகை யில், தமிழக முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்று ஏழை, எளிய அடித்தட்டு மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், இல்லத்தரசிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். பள்ளி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் விலையில்லா மடிக் கணினிகள், சைக்கிள்கள் உள் ளிட்ட பொருட்களை வழங்கி தமிழகத்தில் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறார். இந்தி யாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்துவது இல்லை.

தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 15 ஆயிரத்து 789 மாணவ-மாணவிகளுக்கு ரூ.5 கோடியே 57 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பில் விலை யில்லா மிதிவண்டிகள் வழங் கப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டம் பள்ளிக்கல்வித் துறையில் மிகுந்த வளர்ச்சியை பெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் தர்மபுரி மாவட் டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் 6.31 சதவீதமும், 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 9 சதவீதமும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க கல்வித்துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமர், கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பூக் கடை முனுசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நாகராஜன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து தர்ம புரி மாவட்டம் செட்டிக்கரை யில் ரூ.49 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு பொறியியல் கல்லூரி கட்டுமான பணிகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் ஆய்வு செய் தார். அப்போது பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க பொறியாளர்கள், ஒப் பந்ததாரர்களுக்கு உத்தரவிட் டார். பின்னர் அக்கமனஅள்ளி ஊராட்சி நடுப்பட்டியில் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டு வரும் சமுதாய கூடம் கட்டுமான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

No comments:

Powered by Blogger.