Header Ads

Breaking News
recent

அரசு ஐடிஐ.,யில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தருமபுரி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான காலக்கெடு வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தொழில் பயிற்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: இடையில் நின்ற மாணவர், நிரப்பப்படாத இடங்களுக்கு அரசு தொழில் பயிற்சி மையம், 3 தனியார் நிலையங்களில் இந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.

அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பயிலும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இன வேறுபாடின்றி மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகையுடன், விலையில்லா காலணி, சீருடை, மிதிவண்டி, மடிக் கணினி, இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். இதுதவிர பயிற்சியாளர்கள் தங்க உணவுடன் கூடிய விடுதி உண்டு.

பயிற்சியில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அசல் கல்வி சான்றிதழுடன் சேர்க்கை கட்டணம் ரூ.250 கொண்டு வர வேண்டும்.

தனியார் தொழில் பயிற்சி நிலையங்களிலும் அரசு ஒதுக்கீடு சேர்க்கைக்கும் இந்த மையத்திலேயே நடைபெறும். தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.