Header Ads

Breaking News
recent

மாற்றுத்திறனாளிகளுக்கான துணை மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்

பி.எஸ்ஸி. நர்ஸிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது.

தமிழக சுகாதாரத் துறையின் இணையதளத்தில் கலந்தாய்வுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்சி நர்ஸிங், பி.பார்ம், பி.ஏ.எஸ்.எல்.பி. (பேச்சுப் பயிற்சி படிப்பு), பிபிடி (பிஸியோதெரபி), பிஓடி (ஆக்குபேஷனல் தெரபி), பி.எஸ்சி ரேடியாலஜி - இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்ஸி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி.கார்டியோ பல்மோனரி பர்ஃப்யூஷன் டெக்னாலஜி (இதய- நுரையீரல் கருவி தொழில்நுட்பப் படிப்பு) ஆகிய எட்டு படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகின்றது.

முதல் நாளான ஆகஸ்ட் 18-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறும். 19-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் மாணவர்களுக்குத் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில்  தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், செயலாளர், தேர்வுக்குழு என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்கதாக, ரூ. 200-க்கான வரைவோலை எடுக்க வேண்டும். வரைவோலை இல்லாத மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். முதல்கட்டக் கலந்தாய்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Powered by Blogger.