Header Ads

Breaking News
recent

8-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு நடத்தப்படாததால் ஏராளமானோர் பாதிப்பு

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி- மார்ச் மாதங்களில் 8-ஆம் வகுப்பு தனித்தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் வெளியிடும். இதற்கான விண்ணப்பங்களை ஆன் லைன் மூலம் பூர்த்தி செய்து தனித்தேர்வர்கள் அனுப்புவர். இவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரலில் நடத்தப்பட்டு, 

ஜூலை மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படும். இருப்பினும் நடப்பாண்டிற்கான 8-ஆம் வகுப்பு தனித்தேர்வுகள் குறித்து அறிவிப்பு கடந்த 5 மாதங்களாக வெளியிடப்படவில்லை. இதுகுறித்து தனித்தேர்வர்கள் மற்றும் டியூசன் சென்டர்கள் நடத்துபவர்கள், தேர்வுத்துறை அதிகாரிகளை பலமுறை தொடர்பு கொண்டு கேட்ட போதும், அதிகாரிகள் முறையாக பதிலளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்தை தொடர்பு கொண்டபோது, நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக 8-ஆம் வகுப்பு தனித்தேர்வுகள் காலதாமதமாகி உள்ளதாகக் கூறினர். இருப்பினும் இந்தத் தேர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

No comments:

Powered by Blogger.