Header Ads

Breaking News
recent

ஈரோட்டில் ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம்

ஈரோட்டில் ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் அடுத்தமாதம் 6 நாட்கள் நடக்கிறது. இதில்கோவை,திருப்பூர் உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
 
ஆள் சேர்ப்பு முகாம்

கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் மூலம் அடுத்த மாதம்(செப்டம்பர்) 4–ந்தேதி முதல் 9–ந்தேதிவரை ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் அடையலாம். ராணுவ வீரர் பதவிக்கு 4–9–1993 முதல் 4–3–1997–க்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்து இருக்க வேண்டும். ராணுவ தொழில்நுட்ப பிரிவு, குமாஸ்தா, ஸ்டோர் கீப்பர் பதவிகளுக்கு 4–9–1991 முதல் 4–3–1997–க்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்து இருக்க வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பு

இந்த முகாமில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி அடுத்த மாதம் 4–ந்தேதியும், ஆள் சேர்ப்பு நிகழ்ச்சி 5–ந்தேதியும் நடைபெறும். முன்னாள் படைவீரர்கள், தற்போது பணியில் உள்ளவர்களின் வாரிசுகள், போரில் கணவரை இழந்த விதவைகளின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் குறிப்பிட்ட தேதிகளில் அனைத்து நாட்களிலும் கலந்துகொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.