Header Ads

Breaking News
recent

உங்கள் மோட்டார் சைக்கிளின் பெயிண்டை பாதுகாப்பது எப்படி




மோட்டார் சைக்கிளின் பெயிண்டை பாதுகாப்பது ஒன்றும் ராக்கெட் அறிவியல் அல்ல. அதற்கு சிறிது நேரமும், பொறுமையும் மட்டுமே தேவை. ஆனால், உங்களது விலை உயர்ந்த வாகனத்துக்காக நிச்சயம் அதனை உங்களால் செய்ய முடியும்.
மோட்டார் சைக்கிளின் பெயிண்டை பாதுகாப்பது, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு காட்டுவதற்காக மட்டும் அல்ல. உங்கள் விருப்பம்போல உங்கள் வாகனத்தை எங்கு செல்ல வேண்டுமோ அங்கு ஓட்டிச் செல்கிறீர்கள். அதே சமயம், அந்த நாள் நிறைவில், அந்த வாகனத்துக்காக சிறிது நேரத்தை ஒதுக்கினால், முதல் முறை உங்கள் வாகனத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த போது எவ்வளவு பெருமிதமாக இருந்தீர்களோ, அதே உணர்வை எப்போதும் அடையலாம்.
மோட்டார் சைக்கிளின் பெயிண்டை பாதுகாப்பது ஒன்றும் ராக்கெட் அறிவியல் அல்ல. அதற்கு சிறிது நேரமும், பொறுமையும் மட்டுமே தேவை. ஆனால், உங்களது விலை உயர்ந்த வாகனத்துக்காக நிச்சயம் அதனை உங்களால் செய்ய முடியும்.

டிப்ஸ் 1. வாகனத்துக்கு கவர் போட்டு மூடி வையுங்கள்
உங்கள் வாகனத்தை எப்போது ஓட்டிச் சென்றாலும் அது புதிது போல தோன்ற வேண்டுமானால், அதற்கான சில அடிப்படை விஷயங்களைச் செய்ய வேண்டும். உங்கள் வாகனத்தை துடைப்பதற்காக எண்ணெய், தண்ணீர், அதற்கான பூச்சுக்களை வாங்கி செலவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றால், அதற்குரிய கவரை வாங்கி, உங்கள் மோட்டார் சைக்கிளை மூடி வையுங்கள். இவ்வாறு செய்வதால், நீங்கள் மோட்டார் சைக்கிளை வெளியே எடுக்கும் போதெல்லாம் துடைத்து தூய்மை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இது வாகனத்தை கவர் போட்டு மூடி வைப்பது மிக சிறந்த பாதுகாப்பு முறையாக இருக்கும்.

டிப்ஸ் 2. சுத்தமாக வைத்திருத்தல்
என்னதான் கவர் போட்டு மூடி வைத்தாலும் சில மோசமான சூழ்நிலைகளால் வாகனம் மாசுபட்டு விடும். அவ்வாறு ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்? உடனடியாக அதனை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அந்த அழுக்கே உங்கள் வாகனத்தின் பெயிண்டை, அதன் ஆயுளுக்கு முன்பே சுரண்டி எடுத்துவிடும். ஒவ்வொரு முறை வாகனத்தை கழுவிய பிறகும், வாக்ஸிங்கால் துடைத்துவிட்டால், வாகனம் எப்போதும் புதிது போல ஜொலிக்கும்.

டிப்ஸ் 3. கீறல்களை கவனித்தல்
எவ்வளவு தான் பாதுகாப்புடன் வாகனத்தை பராமரித்தாலும், சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசலில் ஓட்டும் போதும் வாகனத்தில் ஏதேனும் கீறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே அழுது புலம்ப வேண்டாம். அதுபோல் ஏற்படாமல் காக்கவும் ஒரு வழி உள்ளது.
இதுபோன்ற தேவையற்ற கீறல்களில் இருந்து உங்களை வாகனத்தை பாதுகாக்க முடியும். அது என்னவென்றால், டிரான்பரண்ட் பிலிம்கள் தற்போது விற்பனையில் உள்ளன. அவற்றை, வாகனத்தில் அதிகம் கீறல்கள் ஏற்படும் பகுதிகளில் ஓட்டி வைக்கலாம். இவை, உங்கள் மோட்டார் சைக்கிளில் கீறல்கள் ஏற்படுவதை தடுக்கும்.

டிப்ஸ் 4. மெழுகு பயன்படுத்தினால் மிளிரும்
வாகனம் மாசடைந்துவிட்டால் உடனடியாக அதனை கழுவுவது மட்டும், உங்கள் வாகனத்தை நீண்ட நாட்களுக்கு மிளிர வைக்கப் போதாது. ஒவ்வொரு முறை வாகனத்தை சுத்தம் செய்த பிறகும், மெழுகு பயன்படுத்தி வாகனத்தை துடைக்க வேண்டும். இதன் மூலமாக, கழுவுவதால், வாகனத்தின் பெயிண்ட் இழக்கும் மினுமினுப்பை வாகனம் திரும்பப் பெறும். இது, வாகனத்தில் ஒட்டியிருக்கும் அழுக்குகளையும் நீக்க உதவுகிறது.
மெழுகு பயன்படுத்துவது மட்டும் அல்லாமல், டாஷ்போர்ட் பாலிஷ் என்பதையும் உங்கள் வாகனத்துக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
மெழுகு பயன்படுத்துதல், கழுவுதல், கவர் போட்டு வைத்தல், பாலிஷ் போடுதல் போன்றவை, உங்கள் மோட்டார் சைக்கிளை அதிக நாட்களுக்கு பெயிண்ட் தனது மிளிரும் தன்மையை இழக்காமல் பாதுகாக்க உதவும்.
இதனை எப்போதாவது செய்யாமல், தொடர்ந்து செய்து வருவதன் பலன், வாகனத்தை பார்க்கும் போது கண்கூடாகத் தெரியும். எனவே, உங்களின் மந்திரமாக இருக்க வேண்டியது, உங்கள் மோட்டார் சைக்கிளை சுத்தமாகவும், மின்னும் தன்மையுடன் எப்போதும் பராமரிப்பதே சிறந்தது.

No comments:

Powered by Blogger.