Header Ads

Breaking News
recent

பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் போட்டிகள்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வடக்காடி வீதியில் அமைந்துள்ள மதுரைத் திருவள்ளுவர் கழக 73-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு திருக்குறள் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளதாக, அக்கழக செயலாளர் சுப.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்
மேலும் கூறியிருப்பது:


ஜனவரி 10-ம் தேதி 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருக்குறள் மனப்பாடப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிக்கு நட்பு, சொல்வன்மை, ஊக்கமுடைமை, வினைத்திட்டம் ஆகிய தலைப்புகளில் ஜனவரி 10-ம் தேதி காலை 10 மணிக்கு மாணவியருக்கும், மாலை 4 மணிக்கு மாணவர்களுக்கும் போட்டி நடைபெறும்.

உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கான (9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை) பேச்சுப் போட்டி ஜனவரி 11-ம் தேதி நடைபெறும்.

அன்று காலை 10 மணிக்கு மாணவியருக்கும், மாலை 4 மணிக்கு மாணவர்களுக்கும், வாழ்வாங்கு வாழ்தல், அறிவும் ஆற்றலும், ஒழுக்கமே உயர்வு தரும், இன்பமும், துன்பமும் ஆகியவற்றில் ஏதாவது ஒரு தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும்.

கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஜனவரி 9-ம் தேதி மாலை 5 மணிக்கு வாழ்வை உயர்த்தும் வள்ளுவம், வள்ளுவர் கண்ட வளநாடு, திருக்குறள் கூறும் இல்லறம், உலகப்பொதுமறை திருக்குறள் ஆகியவற்றில் ஏதாவது ஒரு தலைப்பில் 8 நிமிடங்கள் பேசும் வகையில் பேச்சுப்போட்டி நடைபெறுகிறது.

பங்குபெற விரும்புவோர், செயலாளர், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை-1 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். அலைபேசியில் 98401 17983 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் போட்டியில் பங்குபெறும் மாணவ, மாணவியர் பெயரைப் பதிவு செய்யலாம், என தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.