Header Ads

Breaking News
recent

பெரியார் பல்கலை: செப். 11-ல் சுற்றுச்சூழல் மேலாண்மைப் பயிலரங்கம்

பெரியார் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பசுமை மேலாண்மைக் குறித்த தேசியப் பயிலரங்கம் செப். 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரியார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் சார்பில் ஆற்றல், சுற்றுச்சூழல் பசுமை முயற்சிகள் என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கம் செப் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் பயிலரங்கை தொடக்கி வைக்கிறார்.

இதில், சேலம் மாவட்ட வன அலுவலர் பி.ஜெயபாலன், போர்ச்சுகல் நாட்டின் ஆல்கர்வ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரத்தினம் ராஜா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.காமராஜ், கோவை மரபியல், மரம் வளர்ப்பு நிறுவனப் பேராசிரியர் ஏ.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். நிறைவு விழாவில் பதிவாளர் கே.அங்கமுத்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசுகிறார்.

No comments:

Powered by Blogger.